கிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு :அமைச்சர் நமச்சிவாயம்

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின் புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள கிரண்பேடியை கண்டித்து,தொடர்ச்சியாக 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது என்றும் ஆனாலும் அரசு முன்வைத்த கோரிக்கைகளை கிரண்பேடி நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்தார். அவருக்கு எதிராக புதுச்சேரி முழுவதும் கிராமங்கள் தோறும் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக நமச்சிவாயம் தெரிவித்தார்

Related Posts