கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்க மக்கள் நீதி மையம் முடிவு

கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்க மக்கள் நீதி மையம் முடிவு செய்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

            நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம்  கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும்.எனவும், அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா போடும் கடமை அரசுக்கு உள்ளதாகவும்,, ஆனால் அது முறையாக நடத்தப்படுவது இல்லை எனவும் அவர் கூறினார். கிராம சபை கூட்டங்களில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்தார். தகாத உறவு குற்றமல்ல என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் கலாச்சாரம் என்பது 50ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும் எனவும் அவர் கூறின்னார். 2 அல்லது 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்,அவர்கள் “அம்மா” வாசைக்கு பிறகு வந்தவர்கள் என தெரிவித்தார்.

Related Posts