கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிட தடை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிட புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஷ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துள்ளார். அதன்படி உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பிரியாணி மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்பிகியூ உணவு வகைகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதே நடைமுறையை தேசிய அணிக்கும் கடைபிடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் வீரர்கள் உணவு முறையை சரியாக கடைபிடிப்பதில்லை என்பதாலேயே மிஸ்பா உல் ஹக் ஒவ்வொரு வீரர்களிடமும் உடல் தகுதிக்காக, உணவு முறையை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றாதவர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Related Posts