கிரிவலப்பாதையில் உள்ள வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் 

சித்திரை முழுநிலவு நாளான நாளை மறுநாள் திருவண்ணாமலையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர் கிரிவலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கிரிவலப்பாதையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, கிரிவலப்பாதையில் உள்ள வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், , தேர்தல் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு என கூடுதல் பணிச்சுமை காரணமாக, வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 2 காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் சுமார் 2 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலைக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும், தெரிவித்தார்.  கோயில், கிரிவலப்பாதை, மற்றும் நகர் முழுக்க மொத்தம் 289 கண்காணிப்பு காமிராக்கள் மட்டுமின்றி ஆளில்லா குட்டி விமானம் மூலமும் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகருக்கு வரும் அனைத்து பாதைகளிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

இதேபோல் மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழவை யொட்டி 18ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் மதுரை தொகுதியில் மட்டும்  வாக்குப்பதிவு இரவு 8 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Related Posts