கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவு: வைகோ இரங்கல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

இதுக் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடங்கிய கhலத்திலிருந்து கழகத்தில் தீவிரமாகப் பணியாற்றிய டி.ஜி.மாதையன் அவர்கள் ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தின் துணைச் செயலாளராகவும், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டம் உருவானபோது மாவட்டக் கழகச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார். அவருடைய மகள் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழக வளர்ச்சிக்கhக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவருடன் கழகப் பணியாற்றிய கிருஷ்ணகிரி மாவட்டத் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனத் தெரிவித்துள்ளார்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts