கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்

திருவுருவமான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை திருநாளாக கொண்டாடி மகிழும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தியாகத்தின் மறுவுருவமான இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். .

‘‘பகைவர்களுக்கும் நன்மை செய்வதால் பரலோகத்திலிருக்கிற பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்’’ என்றுரைத்த இயேசு கிறிஸ்து, கொடியவர்களால் சித்ரவதை செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக அனுசரித்து, அதனைத் தொடர்ந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் வாழும் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த புனித நாளில், உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் தழைக்கட்டும் என  இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

 

 

Related Posts