கிறித்துவ வன்னியர்களை எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர் உறுதி

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்ப்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து, அஇஅதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாங்கனி சின்னத்தில் வாக்களிக்க வேண்டி பரப்புரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டார். இது குறித்து பேசும்பொழுது தமிழகத்தில் சடடம் ஒழுங்கு நல்ல முறையில் உள்ளது. துணை முதல்வராக ஸ்டாலின் இருந்தபொழுது மதுரைக்கு வர அச்சப்பட்டார். ஆனால் தற்பொழுது நடைபயணம் செல்லும் அளவிற்கு சுதந்திரம் உள்ளது. ஜெயலலிதா தொடங்கிய அனைத்து நல திட்டங்களும் விரிவு படுத்தப்பட்டு வாக்களித்த மக்களுக்கு சென்று சேரும் வகையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது.ரம்ஜான் நோன்பிற்கு 4ஆயிரத்து தொள்ளாயிரத்து 4900 மெட்ரிக் டன்; அரிசியை வழங்கி வருகின்றது. மேலும் ஹாஜியார்களுக்கு தலா 20 ஆயிரம் நிதி வழங்கியதும் ஜெயலலிதா அரசு .பத்திரிக்கையாளர்கள் நாட்டின் முதுகெலும்பாவார்கள்.இவர்கள் திமுகவினரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டு வருகின்றனர்.ஆனால் ஜெயலலிதா அரசு தான் .இங்கு வன்னியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இந்து வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்த்தது போல கிறித்துவ வன்னியர்களையும் எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இறுதியாக மாங்கனிக்கு வாக்குகள் அளிக்க கோரினார்.நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன்,தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Posts