கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும்

கிழக்கு இந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டங்களை பிரதமரும், வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினருமான மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற முறையில் கடந்த நான்காண்டுகளில் தாம் செய்தவற்றை விளக்க வேண்டியது தனது கடமை என கூறினார். கிழக்கிந்தியாவுக்கான நுழைவு வாயிலாக வாரணாசி நகரம் மேம்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். வாரணாசியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், வாரணாசிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சத்தில் இருந்து தற்போது 21 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத்தளங்களை அழகுப்படும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  சாரநாத் ஸ்தூபி அமைந்துள்ள இடத்தில் ஒலி, ஒளி காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறிய மோடி 2019ல் சர்வதேச கும்பமேளா வாரணாசியில் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts