கி.வீரமணி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது 6 பிரிவுகளின் கீழ் நெல்லை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கி. வீரமணி, ‘கிருஷ்ணர்’ பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ராதா தாமோதர் ஆலய நிர்வாகி சீதாபதி தாஸ் என்பவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நெல்லை 4-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, கி.வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க நெல்லை தச்சநல்லூர் போலீசுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தச்சநல்லூர் போலீஸ் விசாரணை நடத்தி, கி.வீரமணி மீது வழக்கு பதிந்தனர். அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts