கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், தமிழர் நாகரீகமானது 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்தது.  இது தொடர்பாக மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதுடன், 4வது கட்ட அகழாய்வு பணிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தொல்லியல் துறை அலுவலகம் அமைக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை எம்.பிக்கள் கனிமொழி, சு. வெங்கடேசன், கார்திக் சிதம்பரம் ஆகியோர், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சர் பிரகலாத் பாட்டீலை நேரில் சந்தித்து வழங்கினர்.

Related Posts