கீழடி அகழாய்வு சான்றுகளை டெல்லியில் உள்ள யுனெஸ்கோவிடம் சமர்ப்பிப்பு

கீழடி அகழாய்வுகள் குறித்த சான்றுகளை டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அமைப்பாளர்களிடம் அமைச்சர் மா.பா பாண்டியராஜன் வழங்கினார்.

கீழடியில் மேற்கொண்ட அகழ்வராய்ச்சி முடிவுகளை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் வெயிட்டார். அதில், தமிழர்களின் காலம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்பட்டிருந்தது. குறிப்பாக கிமு 6 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை கீழடியை சுற்றி சிறப்பான தமிழ் நாகரீகம் பரவி இருந்தது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வு முடிவுகள் இந்திய வரலாற்றை புரட்டிப்போடும் வகையில் அமைந்திருப்பதால், இந்த சான்றுகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக டெல்லி சென்றுள்ள அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், 2 நாள் நடைபெறும் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அதில், கீழடி அகழாய்வுகள் குறித்த சான்றுகளை யுனெஸ்கோ அமைப்பு நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியாலை சந்திக்கும் அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அகழாய்வுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோரிக்கையை வலியுறுத்த உள்ளார்.

Related Posts