குஜராத்: சிமெண்ட் மூட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு

 

 

குஜராத் மாநிலத்தில் சிமெண்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து, அதில் பயணித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் பவ்நகர் மாவட்டத்தின் பவல்யாலி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிமெண்ட் மூட்டைகளையும்,  20க்கு மேற்பட்ட தொழிலாளர்களையும் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவ்நகர்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்றபோது,  லாரி நிலைதடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிமெண்ட் மூட்டைகளுடன்,  சாலையில் விழுந்த தொழிலாளர்கள் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts