குடிசையே இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு எட்டப்படும் : ஓ.பன்னீர்செல்வம்

வருகிற 2023ஆம் ஆண்டுக்குள் குடிசையே இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு எட்டப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வடசென்னையில், சூளை, புளியந்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2023 ஆம் ஆண்டு தொலை நோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு, இதுவரை 6 லட்சம் குடியிருப்புகள் கட்டிமுடிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள வீடுகள் படிப்படியாக முடிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கு எட்டப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Related Posts