குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அஞ்சலி

கியூபா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கியூபா : ஜூன்-22

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கிரீஸ், சுரினாம் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கியூபா சென்றடைந்தார். ஹவானா விமான நிலையத்தில் ராம்நாத் கோவிந்துக்கு, அந்நாட்டு உயரதிகாரிகள் சிறப்பான வரவேற்பளித்தனர். இதனை அடுத்து, கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ நினைவிடத்துக்கு சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து,  அந்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராம்நாத் கோவிந்த், கியூபா அதிபரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.  

Related Posts