குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பே சிறைக்கு செல்வார் அதிபர் டிரம்ப்

அதிபர் டிரம்ப் 2020 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னதாகவே சிறைக்கு செல்வார் என செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான களத்தில் மூத்த செனட் சபை உறுப்பினர் எலிசபெத் வாரன் உள்ளார். இதற்காக அவர் ஜனநாயக கட்சியினரிடையே பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று அயோவா மாகாணத்தில் ஜனநாயக கட்சியினரை சந்தித்து பேசினார். அப்போது அதிபர் டிரம்ப் தனது பதவி காலத்தில் முழுமையாக நிறைவு மாட்டார் எனவும், 2020 அதிபர் தேர்தலுக்கு முன்பாக அவர் சிறைக்கு செல்வார் எனவும் தெரிவித்தார். இனவெறி மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தினந்தோறும் சுட்டுரையில்கருத்துகளை டிரம்ப் பதிவிடுகிறார் எனவும், மக்கள் அந்த சுட்டுரை பதிவுகளை நம்பி ஏமாறக்கூடாது” என கூறினார்.

Related Posts