குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

         மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அனந்தகுமாரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பு எனவும், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.. பிரதமர் மோடி சுட்டுரைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில்,  முக்கிய கூட்டாளியும், நண்பருமான அனந்த குமார் மறைந்ததால் மிகவும் துயருற்றதாகவும், மிகச்சிறந்த தலைவரான அவர், இளம் வயதில் அரசியலுக்குள் வந்து, சமூகத்திற்காக விடா முயற்சியுடனும் தயவுடனும் பணியாற்றியவர் எனவும் கூறியுள்ளார், சிறந்த நிர்வாகியாகியான அனந்த குமார், அமைச்சரவையில் பல்வேறு துறைகளை சிறப்பாக கையாண்டுள்ளார் எனவும், கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்  பாஜகவை வலுப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டவர் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.. அனந்தகுமார் மனைவியிடம் தொலைபேசியில் பேசி, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாகவும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த சகாவும், தனது நண்பருமான அனந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்ததாகவும்,. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் சதனாந்த கவுடா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தனது நண்பர் அனந்த குமார் மறைவு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்வர் குமாரசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Posts