குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

            குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்து உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளால் இந்தியா பெரிதும் பயனடைந்திருக்கிறது எனவும், இந்திய சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அவர் இணைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ பிரார்த்தனை செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  குடியரசுத் தலைவருக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்துடன் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

Related Posts