குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகையொட்டி பலத்த பாதுகாப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருவதையொட்டி, 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை : மே-03

சென்னைக்கு நாளை காலை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலுக்கு செல்லவுள்ளார். வேலூரில் சி.எம்.சி. மருத்துவமனை நூற்றாண்டு தொடக்க விழாவில் பங்கேற்கவுள்ள அவர், நாராயணா மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவையும் தொடங்கி வைக்கவுள்ளார். பின்னர் மாலை 5 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை திரும்பவுள்ள அவர் ஆளுநர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார். நாளை மறுநாள்  சென்னை பல்கலைக்கழகம் மற்றும் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாக்களில் குடியரசுத் தலைவர் பங்கேற்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் கலந்து கொள்ளவுள்ளார்.

குடியரசு தலைவர் வருகை காரணமாக,  வேலூரிலும் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  இதேபோல், சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Posts