குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிவாக்குமூலம் அளித்தார். .

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா சென்னை சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராகிவாக்குமூலம் அளித்தார். .

கடந்த 2016-ஆம் ஆண்டு வருமானவரித் துறையினர் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த டிஜிபி.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற சென்னை மாநகர முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பலர் லஞ்சம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன்,  ஓய்வு பெற்ற காவல் அதிகாரி  ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 35இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோருக்கு டெல்லிசிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியிருந்தனர். இதன்படி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

 

Related Posts