குட்கா ஊழல் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனுத்தாக்கல்

 

குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி, மே-01 

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால், திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, யார் மனுத்தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என தி.மு.க. தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts