குட்கா ஊழல் விவகாரம் – சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

டெல்லி : மே-10

தமிழகத்தில் 40 கோடி ரூபாய் அளவுக்கு நடந்த குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை  பிறப்பித்தது. சுகாதாரத்துறை அமைச்சர், 2 டிஜிபிக்கள், 2 இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சி, உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு தொடக்கம் முதலே கூறிவந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையே  போதுமானது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா ஊழல் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழக சுகாதாரத் துறை அலுவலர் சிவக்குமார், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts