குட்கா வழக்கில் மேல்முறையீடு செய்ய மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

 

 

குட்கா வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-27

சர் பிட்டி தியாகராயரின் 167வது  பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு, தமிழக அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது ;-

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது திமுகவுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றுதான் திமுக கேட்டது . சிபிஐ விசாரணை நடத்தினாலும் மாநில போலீசாரின் ஒத்துழைப்பு அவசியம்.குட்கா விவகாரத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை.  குட்கா விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது, சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

 

Related Posts