குன்றத்தூர் அருகே வாலிபர்ஒருவர் வெட்டிக் கொலை

சென்னை குன்றத்தூரை அடுத்த அம்பேத்கார் தெருவை சேர்ந்த தீபக்ராஜ் பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் கடந்த 15-ந்தேதி நண்பர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல இடங்களில் தேடியும் தனது மகனை காணவில்லை என்று அவரது  பெற்றோர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் தாம்பரம் அருகே முட்புதரில் வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்று  உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் காணாமல் போன தீபக்ராஜ் என்பது தெரியவந்தது, இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Posts