குப்பைகூடைகளுடன் வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள்

குப்பை வரி குறைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை எனக்கூறி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் குப்பைகூடைகளுடன் சட்டப்பேரவைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது

சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் நாராயணசாமி 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில்வரி, குப்பை வரி ஆகியவற்றை குறைப்பதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்த நிலையில், நேற்று முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நியமன உறுப்பினர்கள்  பேரவைக்குள் குப்பை தொட்டிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Posts