குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கிரண்பேடி

கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகை    வளாகத்தில் கடந்த 4ம் தேதி மாலை புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பணியாளர்கள்,    பல்நோக்கு ஊழியர்கள்,நகராட்சி ஆணையர்கள், துறை இயக்குநர்உள்ளிட்டோருடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்துரையாடினார்.அப்போது புதுச்சேரியில் நகரப்பகுதிகளில்பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டுள்ளது தொடர்பாக விளக்கினார். கால்வாயில் குப்பை கொட்டுபவர்களுக்கு முதல் அபராதம் விதிக்கலாம் எனவும்,  நகராட்சி ஆய்வாளர்கள் இதை நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார். கடை உரிமையாளர்கள் கடை முன் உள்ள  தொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், வாய்க்கால்களில் குப்பை கொட்டும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டார்..

Related Posts