குமாரசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் – திருநாவுக்கரசர்

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மதுரை : மே-16

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து, ஆட்சியமைக்கவுள்ளதாக கூறினார். போதுமான உறுப்பினர்கள் இருப்பதால், குமாரசாமியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.

Related Posts