கும்பகரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கும்பகரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது, கும்பக்கரை அருவி. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவிக்கு விடுமுறை நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தேனியில் நிலவிவந்த கடும் வெயில் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் அருவியில் நீர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில்  இரண்டு நாட்களாக மேற்கு தொடர்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக பெய்த மழையினால், கும்பக்கரை அருவிக்கு நீர் வரத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு கனமழை பெய்ததால் அருவியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

Related Posts