கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

தேனி கும்பகரை அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி : மே-16

வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, கும்பகரை அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Posts