கும்பகோணத்தில் நம்மாழ்வார் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்பகோணத்தில் நம்மாழ்வார் நற்பணி மன்றம்  சார்பில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில்  நகராட்சி பொறுப்பு ஆணையர் கலந்து கொண்டு மகாமகம் கலையரங்கில் வேப்பமரம், புங்கமரம், வில்வமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு பணியைத் தொடங்கி வைத்தார். இதில் முதல்கட்டமாக 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் சாம்பசிவம்,  சுகாதாரத்துறை அலுவலர் பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts