கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரில் தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேகம் இன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக கோயிலுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின், நஞ்சுண்டேஷ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள், இசை வாத்தியங்கள் முழங்க வெகு விமரிசையாக நடத்தப்பட்டு, பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

Related Posts