குரூப் 2 தேர்வில் மாற்றம் : தமிழில் படித்தவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும்

குரூப் 2 தேர்வில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் தமிழில் படித்தவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் மொழியில் பயின்றவர்கள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக குரூப் 2 தேர்வில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Related Posts