குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்திய குழந்தைகள் மருத்துவக் கழகத்தின் சார்பில் 44 ஆம் ஆண்டு கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குழந்தை மருத்துவத்தில் சிறந்து விளங்கிய பல்வேறு மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் சிறப்பு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாகவும், இதற்காக தமிழக அரசு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும் கூறினார்.

Related Posts