குழந்தைகள் சாதி வேற்றுமையின்றி வளர வேண்டும் – வைகோ

கலிங்கப்பட்டி:

ஒவ்வொரு குழந்தைகளும் சாதி வேற்றுமையின்றி வளர வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக பிரமுகர் குமாரின் இல்லத் திருமணவிழா கலிங்கப்பட்டியில் இன்று நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்கள் சிவக்குமார், கோமதி ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். அப்போது, பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் எனவும் இப்போதுள்ள ஒற்றுமை எப்போதும் நீடிக்க வேண்டும் எனவும் கூறினார். ஒவ்வொரு குழந்தைகளும் சாதி வேற்றுமையின்றி வளர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

Related Posts