குழந்தை கடத்தல் குறித்து வாட்ஸ் ஆப்பில் வதந்தி: திருவண்ணாமலையில் இளைஞர் கைது

 

குழந்தைளை கடத்த வடமாநிலங்களில் இருந்து 100 பேர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்திருப்பதாக வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 தமிழகத்தில் குழந்தைகளை கடத்த வடமாநிலங்களில் இருந்து பலர் வந்திருப்பதாக வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்தியை உண்மை என்று நம்பி வட மாநிலத்தவர்கள், மன நலம் பாதித்தவர்கள், சுற்றுலாப் பயணிகளை வட மாவட்டங்களில் கிராம மக்கள் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்கிற மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, வாட்ஸ் ஆப்பில் குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிகளில் குழந்தைகளை கடத்த 100 பேர் வந்திருப்பதாக பேசி வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில், புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞரை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர், சைபர் கிரைம் மூலமாக வீரராகவன் இருப்பிடத்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் வீரராகவன் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Posts