கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என மாநிலங்களவையில், ம.தி.மு.க. எம்.பி. வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் நேற்றைய கூட்டத்தொடரில் நேரமில்லா நேரத்தின் பேசிய போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூடங்குளம் அணு உலை மையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். எனினும் மத்திய அரசு அதனை நிறுவி, செயல்படுத்தி வருவதை சுட்டிக்காட்டினார்

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை புதைப்பதன் மூலம் அப்பகுதி சுடுகாடாக மாற வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டிய வைகோ, அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் அந்தந்த நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்களை அடுத்து அணு உலைகளை நிறுவுவதை நிறுத்திவிட்டதாகவும், மத்திய அரசும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் பண்டோரா என்ற கொரியப் படத்தில் அணு உலை விபத்தால் ஏற்படும் நிகழ்வை சுட்டிக்காட்டிய வைகோ, இதன் சி.டி. யை தாம் தருவதாகவும், அதனை மாநிலங்களவை தலைவர் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வைகோ பேசி முடித்தவுடன், பல உறுப்பினர்கள் வைகோ அவர்களின் பேச்சை ஆதரித்தனர்.குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஆதரித்தனர்

Related Posts