கூடன்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும்

கூடன்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து,  நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் 1, 2அணு உலைகள் இயங்குகிறதா என்று தெரியாத நிலையில் மேலும் 4 அணு உலைகள் அமைத்து அணு உலைப் பூங்கா அமைக்கும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.  அபாயகரமான அணு உலைப் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என்றும்  , இதுபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடக் கொள்கைத் தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  , மற்றும் கன்னியாகுமரி,கோவளம்  மணக்குடி துறை முகத்திட்டத்தையும் கைவிட வேண்டும் என்றும்  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1-ந்தேதி நெல்லை பாளையங்கோட்டையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் அன்றைய தினம் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப்படும்  என்று அவர் எச்சரித்தார்

Related Posts