கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

 

கோபியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ மாணவிகள் 5 லட்சத்து 40ஆயிரம் பேருக்கு ஏற்கனவே இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டதாகவும்,  இன்று பிளஸ் 1 மாணவ – மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 2017-18 விடுபட்ட மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார், . இந்தியாவிலேயே முதல்முறையாக பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டதுதமிழ்நாட்டில்தான் என்றும் மத்திய அரசு சார்பில் 850 பள்ளிகளில் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அடல் டிங்கர் லேப் தொடங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும்,  தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

அரசு பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

 

Related Posts