கூடுதல் திரையரங்குகளை அமைக்க விரைவில் அனுமதி : கடம்பூர் ராஜூ

அனைத்து திரைப்படங்களும் வெளியாகும் வகையில் பெரிய திரையரங்குகளை பிரித்து கூடுதல் திரையரங்குகளை அமைத்துக் கொள்ள, விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைனில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதை தடுக்க திரைப்படத் துறையும், உள் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.

Related Posts