கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது குறித்து ஸ்டாலின் முடிவு செய்வார் :திருமாவளவன்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக தலைமையிலான கூட்டணி மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி, தமிழகத்தில் முதலில் உருவான கூட்டணி என்றும் திமுக கூட்டணியில் தான் தொகுதி பங்கீடு குறித்து முதலில் பேச்சு வார்த்தை தொடங்கியது என்றும் தெரிவித்தார். 9 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியாக திமுக கூட்டணி விளங்குவதாக அவர் தெரிவித்தார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது என்றும் இரண்டொரு நாட்களில் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக, அதிமுக கூட்டணிகளுக்கு எதிரான உளவியல் பேச்சு மக்களிடையே உள்ளது என்றும், எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 440 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தேமுதிக திமுக கூட்டணி இடம் பெறுமா என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்ய வேண்டும் என தொல் திருமாவளவன் கூறினார்.

Related Posts