கூட்டணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் விளக்கமளிக்க வேண்டும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டணி தொடர்பாக துரைமுருகன் கூறிய கருத்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் விளக்கமளிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மாவீரன் பிரபாகரனின் 64வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் மதிமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது திமுக கூட்டணியில் மதிமுக , விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை என்று தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்று அளித்த பேட்டியில் துரைமுருகள் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வைகோ, கூட்டணி தொடர்பாக துரைமுருகன் கூறிய கருத்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய வைகோ, கஜா புயல் நிவாரணப் பணிகளை பொறுத்தவரை முதல் அமைச்சர் தனது பணியை முறையாக செய்யவில்லை எனவும், எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார். தமிழக புயல் நிவாரண நிதிக்கு மத்திய அரசு 25ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் எனவும் தவறினால் பிரதமர் மோடியை தமிழகத்திற்குள் நுழைய விட மாட்டோம் எனவும் வைகோ தெரிவித்தார். இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுத்லையை வலியுறுத்தி மதிமுக சார்பில் டிசம்பர் 3ந் தேதி நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  .

Related Posts