கூட்டுறவு அங்காடிகளில் வெங்காயம் கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்

தமிழகத்திலுள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால், விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 80 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் பெரிய வெங்காயம் கிலோ 33 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் 200 ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Related Posts