கென்யாவில் கனமழை: அணை உடைந்ததில் 27 பேர் பலி

 

 

கென்யாவில் கனமழை காரணமாக அணை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.

கென்யாவின் நகுரு நகரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மழை காரணமாக சுபுகியா பகுதியில் இருந்த அணை திடீரென உடைந்ததால், வெளியேறிய தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு மக்கள் தத்தளித்தனர். உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு தண்ணீர் தத்தளித்த பலர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 27 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருவதால், அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related Posts