கென்யாவில் தொடர் கனமழை – பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்வு

கென்யாவின்  கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.

கென்யா : மே-05

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து கனமழை  பெய்து வருகிறது. இதன் காரணமாக, வடக்கு கென்யா மற்றும் மத்திய கென்யாவின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக இதுவரை சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ராணுவம் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், மீட்புப் பணிக்கு ஆட்கள் மற்றும் நிதி தேவைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts