கேரளாவில் இன்று விடுக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டத்தை சிவசேனா கட்சி வாபஸ் பெற்றது

பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் இன்று விடுக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டத்தை சிவசேனா கட்சி வாபஸ் பெற்றுள்ளது.

            நித்திய பிரம்மச்சாரி கோலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைய ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண்களில் 10 வயதிற்கு மேல் 50வயதிற்குட்பட்டவர்கள் யாரும் இக்கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வெளியானதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது ஆகம விதிகளுக்கு முரணாக அமையும் என்று கூறினர். இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று 12 மணிநேர முழு அடைப்பு போராட்டத்துக்கு சிவசேனா கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், கேரளாவில், இன்று புயலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால், முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிவசேனா கட்சி அறிவித்துள்ளது. தற்போது, முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts