கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’

கேரளாவில் உள்ள கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் மாதம் மழை தீவிரமடைந்தது. பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.  இந்த 10 மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. 2 நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Related Posts