கேரள அரசு ஆக்கிரப்பு செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் : பி.ஆர். பாண்டியன்

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் கேரள அரசு ஆக்கிரப்பு செய்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று  அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

‘ தேனியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் முடிந்தால் 152 அடி வரை அணையின் பலத்தை பொறுத்து உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மத்திய அரசு மற்றும் தமிழக கேரள அரசுகங்ள அதனை ஏற்று ஆய்வுக் குழு அமைத்து அவ்வப்போது அணையை பார்வையிட்டு பரிசோதனை நடத்தி இன்று வரை அணை பலமாகவே உள்ளது என்று ஆய்வறிக்கை அளித்த பிறகும்  முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி வழங்கியிருப்பது  தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார். அணையின் நீர்தேக்க பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் கேரள அரசு துணிந்து ஈடுபட்டு வருகிறது என்றும் இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Posts