கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாகக் களை கட்டியது

கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளமான பூரம் திருவிழா ஆண்டுதோறும் திருச்சூரின் ஆரட்டுப்புழா கோவிலில் நடைபெறுகிறது.

திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கோயில்களில் இந்த பூரம் திருவிழாவை முன்னிட்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு பார்வையாளர்களைக் வெகுவாகக் கவர்ந்தது.

பூரம் திருவிழாவின் மற்றொரு முக்கியமான அம்சமாக செண்டை, மத்தளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகளைக் கொண்ட பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேள இசை நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று இசைத்தனர்.

பூரம் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை சிறப்பு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருச்சூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

Related Posts