கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு தனிநபர்கள், அமைப்புகள், அறக்கட்டளைகள் ஆகியவற்றிடம் இருந்து நன்கொடைகள் பெறப்படுகின்றன. இந்த நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80(ஜி)–ன் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதுபோல், கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக நன்கொடை அளிக்கும்போது, அந்த தொண்டு நிறுவனங்கள் வருமான வரி விலக்கு பெற்று இருந்தால், 80(ஜி) பிரிவின் கீழ், 50 சதவீத வருமான வரி தள்ளுபடி அளிக்கப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்தார்.

வருமான வரி விலக்கை விரைந்து பெறுவதற்கு வசதியாக, நன்கொடை அளித்த விவரங்களை தங்களது முகவரியுடன் இமெயில் மூலமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts