கேராளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Want create site? Find Free WordPress Themes and plugins.

கேராளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

        கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தற்போது தான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் கேரளாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் நாளைமறுநாள், கேரளாவின் பத்தனம் திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் 64 புள்ளி 4 மில்லி மீட்டரில் இருந்து 124 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக் கூடும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, நாளை பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

        இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தி உள்ளதாக  தனது சுட்டுரை பக்கத்தில்,  தெரிவித்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts