கே.சி கருப்பண்ணனை கண்டித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயற்ச்சி

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று மதியம் 5 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து, தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர்.

 

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்கள் 7 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பவானி அருகே உள்ள மயிலம்பாடி கன்னாங்கரட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த சிவராஜ், அவரது தம்பி அர்ஜுனன்,  உள்ளிட்ட 7 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

 

மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பராமரித்து வந்த 4½ ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அரசு அதிகாரிகள் கையகப்படுத்தியதாகவும்  இதற்கு அமைச்சர் கே.சி கருப்பண்ணன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிகிறது. மேலும் அந்த இடத்திலிருந்த தென்னை மரத்திற்கு நஷ்டயீடு தர முடியாது என அதிகாரிகள் தெரிவித்ததால் 7 பேரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

 

இதனைத் தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts